ஐந்து ரூபாய் காயின்
ஐந்தில் அத்தனைத் துயரையும்
தீர்த்துவைக்கும்
அற்புத பரிகாரம்...
கோடீஸ்வரயோகம் தரும்
குரு, கேதுவின் யோகம் பெற..
ஐந்து ரூபாய் காயின் ஏழு எடுத்து
உள்ளங்கையில் வைத்துக்கொண்டு
விநாயகரை நடப்பு
தசைக் ஹோரையில்
தசைக் கிழமையில்
தசைக்கேற்ப எண்ணிக்கையில்
சுற்றி வந்து
ஒன்பது உக்கி போட்டு
நவகிரக மந்திரம் சொல்லி
வேண்டுதல் வைக்க
வேண்டியபடி நடந்தேறும்...
சுக்கிர தசை நடப்பு
வெள்ளிக்கிழமை
சுக்கிர ஹோரையில்
ஆறு ஐந்து ரூபாய் காயினை
உள்ளங்கையில் வைத்தபடி
ஆறுமுறை விநாயகரை
சுற்றிவந்து
ஒன்பது தோப்புக்கரணம் போட்டு
வேண்டுதல் வைக்க
பெண், பொன்னால்
சந்தோஷம், அதிர்ஷ்டம், யோகம்
அத்தனையும் நிறைவேறும்...
பெரும் பணத்தைத் தரும்
பெரியாண்டவர்
குருபகவானை தொழுதுவர
உன்னைத் தேடி
செல்வம் தானாய் வரும்...
தங்கமாய் ஜொலிக்கும்
ஐந்து ரூபாய் காயின் மூன்றை எடுத்து
மஞ்சள் துணியில் முடிந்து..
உள்ளங்கையில் வைத்துக்கொண்டு
தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை
அதிகாலை குரு ஹோரையில்
மூன்று முறை சுற்றி வந்தால்
வரவு வரும்... செலவு குறையும்...
வாழ்க்கை வரும்...
வசதி பெருகும்...
வங்கியில் பணம் சேர்த்தால்
பிரிந்தவர் கூடுவர்...
குடும்பத்தில் பிரிவே வராதப்பா...
உண்டியலில் பணம் சேர்க்கவே
வழியில்லை என புலம்புபவன்
வாழ்நாள் முழுவதும்
கஷ்டத்தையே பெறுவான்...
மண் உண்டியலில்
தினம் தினம் பொற்காசுகள் சேர்க்க
செய்த வினையும்
செய்வினையும் சேர்ந்தே கழியுமப்பா...
பணம் என்றால் புதன்
வங்கிக்கு காரகமும் புதன்
ஐந்து ரூபாய் காயின்
ஐந்தை எடுத்து புதன்கிழமை
புதன் ஹோரையில்
சிவனைச் சுற்றி வந்து
வில்வ இலைகளால்
ஐந்து வாரம் அர்ச்சிக்க...
பணவரவு உன் பாக்கெட்டிலும்
பாங்கிலும் கட்டுக்கட்டாய் சேருமப்பா...
ஐந்து ரூபாய் காயினில்
தங்கநிறமும்...
வெவ்வேறு சிம்பல் கொண்டதும்...
இரண்டு காயினை எடுத்து
இரவில் மஞ்சள் நீரில் ஊறவைத்து
அதிகாலை பிரம்ம மூகூர்த்தத்தில்
ஆதிகேசவனை வழிபாடு செய்தால்
நாகதோஷம் நீங்கி
நல்ல வரன் அமையுமப்பா...
ஐந்து ரூபாய் காயின்
வயதுகேற்ப எடுத்து..
திருப்பதிக்கு நேர்ந்து..
பச்சைத் துணியால் கட்டி
பணப்பெட்டியில் பத்திரமாய் வைக்க
பத்தே மாதத்தில்
பரமனைக் கண்டு வர
பணம் கட்டுக்கட்டாய் சேருமப்பா...
அள்ள அள்ள பணம் வர
அற்புதமாய் ஐந்து ரூபாய் பரிகாரம்..
ஐந்து மண்கலயத்தில்
ஐந்து ரூபாய் காயின் ஒன்றைப் போட்டு
அதனுடன் பிரியாணி இலையில்
உங்களுக்குத் தேவையான பணத்தை எழுதி
ஏலக்காய், வாசனை திரவியங்கள் போட்டு,
பால் ஊற்றி... சுக்கிர ஹோரையில்
வெண்பட்டால் மூடி
ஈசான்ய மூலையில் புதைத்துவைக்க
ஆறுமாதங்களில் எண்ணிய பணத்தை
எண்ண வைக்கும்...
வருமானத் தடை
முன்னேற்றத் தடை
குடும்பப் பிரிவு, பிரச்சினை
தொழில் பாதிப்பு என
தொடர் தோல்வி ஏற்படுவது
செய்வினை தோஷம் இருப்பதால்தான்..
காளியம்மன் கோவிலில்
செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில்
மூன்று எலுமிச்சை பழத்தை
திரிசூலத்தில் குத்தி
வேண்டுதல் வைக்க
செய்வினை செத்தவன் செத்துப் போவான்...
கஷ்டங்கள் போக்க எதைத் தின்றால்
பித்தம் தெளியும் என
அலையாமல்
நின்று நிதானமாய் யோசித்தால்
அற்புதமான பரிகாரம் உங்களிடமே
உங்கள் அருகிலேயே இருக்கும்..
சுண்ணாம்பு தடவிய
ஐந்து வெற்றிலையில்
மிளகு, பச்சை கற்பூரம்
பாக்கு வைத்து
வீட்டின் வடகிழக்கு மூலையில
புதைத்துவைக்க..
கெட்டசக்தி புதைந்துபோகும்
வெற்றிமேல் வெற்றிகிட்டும்...
வியாபாரம் பெருக..
வேலையாள் கிடைக்க, நிலைக்க
முதலாளி சிறக்க
ஆஞ்சனேயர் கோவிலுக்கு
சனிக்கிழமை சென்று
வடைமாலை சாற்றி வழிபடவும்..
என்னப்பன் முருகனை
மனமுருக வேண்டினால்
உனக்கு வேண்டியதை
சாப்பிட விடுவார்...
வேண்டாத நேரம்
வேண்டியத தருவார்...
செல்: 96003 53748